சதங்களை பொருட்படுத்தாமல் இந்தியா வெல்வதிலேயே கோஹ்லியின் கவனம் இருக்கும்: ராபின் உத்தப்பா பேட்டி

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேஸ் விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் 46 சதம் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 49 சதம் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் 3 சதங்களே தேவை. ஆசிய கோப்பை தொடருக்கு கோஹ்லி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆசிய கோப்பை அல்லது உலககோப்பையில் அவர் சச்சினின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அளித்துள்ள பேட்டியில், விராட் கோஹ்லி இனி சாதனைகளை முறியடிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

சதங்களைப் பொருட்படுத்தாமல் அவர் இந்தியாவுக்காக போட்டிகளை வெல்வார். ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் இந்தியாவுக்கான போட்டிகளை வெல்வதில் விராட்டின் கவனம் இருக்கும். அவர் சாதனைகளைப் பற்றி உண்மையில் கவலைப்படுவதில்லை. ஆசிய, உலகக் கோப்பை அல்லது வேறு கட்டத்தில் அந்த மைல்கல்லை (சச்சினின் ஒருநாள் சதங்கள் சாதனையை முறியடித்தாலும்) எட்டினாலும அது ஒரு பொருட்டல்ல, ஏனெனில் அவரது ஒரே கவனம் இந்தியாவுக்கான போட்டிகளை வெல்வதில் மட்டுமே உள்ளது. அவரது நூறு சதங்கள் அல்ல,” என்றார்.

The post சதங்களை பொருட்படுத்தாமல் இந்தியா வெல்வதிலேயே கோஹ்லியின் கவனம் இருக்கும்: ராபின் உத்தப்பா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: