தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

வேதாரண்யம்,ஆக.15: ஆகாச மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவில் பரம்பாரிய முறைப்படுகஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் ஆடி திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி பனை மரத்தின் முக்கிய தத்துவத்தை மக்களுக்கும் உணர்த்தும் விதமாக காலம் காலமாக இக்கோயிலில் பனை மட்டையில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதே போல் இந்த ஆண்டும் ஆடி திருவிழாவில் அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்சமிர்தம், இளநீர், தேன், பன்னீர் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

வண்ண மலர் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு போட்டும், முடி இறக்கையும், அம்பாளுக்கு காவடி பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்பு பண்டைய கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பனை மட்டை ஓலைகளில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது. இதில் ஏராளமானவர் கலந்து கொண்டு அரச்சனை செய்து அம்பாளை வழிபட்டனர். பின்பு அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

The post தாணிக்கோட்டகம் ஆகாச மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: