ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மக்கள் நலன் வளர்ச்சிக்காக இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். முக்கிய சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் வைத்துள்ளதை கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம்.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவும் ஆளுநர் முனைகிறார். தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் புறக்கணிக்கின்றோம். தமிழ்நாடு அரசை விமர்சிப்பது மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாது உள்ளிட்டவற்றை கண்டித்து புறக்கணிக்கப்படுகிறது.

நாடு தனது 76ஆவது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட எழுச்சியுடன் தயாராகி வருகிறது. அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளனர். சுதந்திர தினத்தன்று சென்னையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது மரபு. இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

The post ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: