ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல்

 

செய்யூர், ஆக. 13: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் முகையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 200 மாணவ, மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் நெரிசலில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் செய்யூர் எம்எல்ஏ பாபுவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இந்நிலையில், நேற்று அப்பள்ளியில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாபு, ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லதா அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ பாபு கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமானப் பணியினை அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கலை, இலக்கிய அணி மாநில துணை அமைப்பாளர் தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம், நிர்வாகிகள் மணி, பாலமுருகன், அர்ஜுனன், தம்பிதுரை, கோபிநாத், முனுசாமி, பர்வதம் வரதன், தென்னக செல்வன், செந்தில் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: