சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்

 

கரூர், ஆக. 12: சுதந்திர தினத்தன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என, கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று (ஆக.15) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்க, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: