தூதரக அதிகாரி தகவல் இந்தியா-இத்தாலி பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மும்பை: இந்தியா-இத்தாலி இடையேயான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இத்தாலியின் போர் கப்பலான ஐடிஎஸ் மோரோசினி கடந்த 10ம் தேதி மும்பை துறைமுகம் வந்துள்ளது. இப்போர் கப்பல் நாளை வரை இந்தியாவில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போர் கப்பலின் உயர் அதிகாரிகள் மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்திய கடற்படையின் மேற்கு பிரிவு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான இத்தாலி தூதரக அதிகாரி வின்சென்சோ டி லூக்கா, “இந்தியாவின் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு, நீர் மூழ்கி வெடிகுண்டு, ஹெலிகாப்டர், ராடார், மின்னணு போர் கருவிகள் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றில் உதவ இத்தாலி கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இருநாடுகள் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த, விரைவில் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன,” என்று தெரிவித்தார்.

The post தூதரக அதிகாரி தகவல் இந்தியா-இத்தாலி பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: