வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பாமக ஆர்ப்பாட்டம்

சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதையொட்டி செங்கல்பட்டு, காஞ்சி, திருப்போரூரில் பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். திருப்போரூர் ஒன்றிய பாமக சார்பில் நேற்று மாலை 6 மணியளவில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் கோரினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக முன்னாள் எம்.எல்.ஏ திருக்கச்சூர் ஆறுமுகம், இளைஞரணி துணைச் செயலாளர் சக்கரபாணி உள்பட பலர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் பொன்ேனரிகரை பகுதி சென்னை  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை  கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் இளைஞர் அணி மகேஷ்  குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதில் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் உள்ளிட்ட  கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட  50க்கும் மேற்பட்ட பாமகவினரை கைது செய்தனர்….

The post வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பாமக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: