என்சிசி மாணவர்களை தடியால் அடித்த சீனியர் சஸ்பெண்ட்

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் செயல்படும் கல்லூரியில் என்சிசி ஜூனியர் மாணவர்கள் 8 பேரை, சீனியர் மாணவர் ஒருவர் தடியால் அடிக்கும் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சேற்றுப் பகுதியில் புஷ்-அப் நிலையில் கால்களும், தலையும் தரையைத் தொட்டு கைகளை முதுகிற்கு மேல் மடக்கிக் கொண்டு நிற்பதை காணலாம். மேலும் தடியைக் கொண்டு அந்த சீனியர் மற்ற மாணவர்களை அடிக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மகாராஷ்டிர தேசிய கேடட் கார்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. கல்லூரியின் முதல்வரிடம் பெறப்பட்ட அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட சீனியர் மாணவரை கல்லூரியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் வெளியிட்ட பதிவில், ‘மாணவர்களை தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரினார்.

The post என்சிசி மாணவர்களை தடியால் அடித்த சீனியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: