சிங்கம்புணரி முத்துவடுக நாதர் கோயிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முத்து வடுகநாதர் கோயிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில், நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு வணிகர் நலச்சங்கம் சார்பாக 37வது ஆண்டு அன்னதான விழா நடைபெற்றது. இதையொட்டி காலை சித்தருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் வாசனை திரவியங்கள் பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

வண்ணமலர் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கோயில் முன்பு போடப்பட்டிருந்த மெகா பந்தலில் அன்னதானத்திற்காக சோறு மலை போல் குவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய அன்னதானம் மாலை வரை நடைபெற்றது.

இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதேபோல் வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று கோயில் முன்பு பந்தல் அமைத்து அன்னதானம் விழா நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சிங்கம்புணரி முத்துவடுக நாதர் கோயிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Related Stories: