குனியமுத்தூரில் வீடு புகுந்து மருந்துக்கடை அதிபருக்கு கத்திக்குத்து-5 பேர் கைது

 

கோவை, ஆக. 4: குனியமுத்தூரில் வீடு புகுந்து மருந்துக்கடை அதிபரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் கடை நடத்தி வருபவர் சோமசுந்தரம் (62). இவரது வீட்டினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்தது. அந்த கும்பல் சோமசுந்தரத்தை கத்தியால் குத்திவிட்டு, வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்றுவிட்டனர். மேலும் அந்த கும்பல் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.

கத்திக்குத்தில் காயமடைந்த சோமசுந்தரம் அங்குள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்றார். இது குறித்து சோமசுந்தரம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூரை சேர்ந்த பிரகாஷ் (24), நாமக்கல் வரகூரைச் சேர்ந்த மணிவாசகம் (25), நாமக்கல் மாவட்டம் பட்டறை மேடு பாபு (33), குனியமுத்தூர் பேக்டரி வீதி சேர்ந்த சங்கர் (33), நாமக்கல் மாவட்டம் பவித்திரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மீட்கப்பட்டது.

The post குனியமுத்தூரில் வீடு புகுந்து மருந்துக்கடை அதிபருக்கு கத்திக்குத்து-5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: