சேலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம், ஆக.4: ஆடிப்பெருக்கையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்ெபருக்கு விழாவும் ஒன்றாகும். நேற்று ஆடிப்பெருக்கையொட்டி சேலம் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. பின்னர் முத்தங்கி, மயில் இறகால் அலங்காரம் செய்யப்பட்டது. மாமங்கலம் ஊத்துகிணற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அங்கு சுவாமி சிலைகள் நீராடப்பட்டது. பின்னர் அங்குள்ள செயற்கை நீருற்றில் மக்கள் நீராடினர். அங்குள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மாமங்கம் வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் முனியப்பனுக்கு ராஜஅலங்காரம் நடந்தது. ஏராளமானோர் ஆட்டு கிடா, கோழி வெட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோல் சேலம் மாநகரில் உள்ள ராஜகணபதி, சுகவனேஸ்வரர், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை மாரியம்மன், சுப்பிரமணியசுவாமி, சித்தர்கோயில், ஊத்துமலை, குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி உள்பட சேலம் மாநகர், மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் வ.உ.சி., மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை களைகட்டியது. ஒரு கிலோ குண்டுமல்லி ₹500க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ₹360, ஜாதிமல்லி ₹320, காக்கட்டான் ₹240, கலர் காக்கட்டான் ₹160, மலை காக்கட்டான் ₹240, சம்பங்கி ₹200, சாதாசம்பங்கி ₹200, அரளி ₹180, வெள்ளை அரளி ₹190, மஞ்சள் அரளி ₹190, செவ்வரளி ₹220, ஐ.செவ்வரளி ₹200, நந்தியாவட்டம் ₹40, சிவப்பு நந்தியாவட்டம் ₹80, சாமந்தி ₹120 என விற்பனை செய்யப்பட்டது.

The post சேலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: