கடனை திருப்பி செலுத்தாத முதல் 50 பேர் வங்கிகளுக்கு ரூ.87,295 கோடி பாக்கி: 5 ஆண்டுகளில் ரூ.10.57 லட்சம் கோடி கடன் தள்ளுபடி

புதுடெல்லி: கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், எரா இன்ப்ரா இன்ஜினியரிங் லிமிடெட், ஆர்இஐ அக்ரோ லிமிடெட் மற்றும் ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் உள்ளிட்ட 50 நிறுவனங்களில் வங்கிகளில் வாங்கி கடனை வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது: நாடு முழுவதும் வங்கிகளில் கடன் வாங்கி வேண்டும் என்றே திருப்பி செலுத்தாத முதல் 10 நபர்கள் எஸ்சிபி வங்கிகளுக்கு 40,825 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். கடந்த 5 நிதியாண்டுகளில் எஸ்சிபி வங்கிகள் மொத்தமாக ரூ.10,57,326 கோடியை தள்ளுபடி செய்துள்ளன.

எஸ்சிபி வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிசெலுத்தாத முதல் 50 பேர் செலுத்த வேண்டிய தொகை ரூ. 87,295 கோடி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தப்பியோடிய மெஹுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் வங்கிகளுக்கு ரூ.8,738 கோடி திருப்பிச்செலுத்த வேண்டும். எரா இன்ப்ரா இன்ஜினியரிங் லிமிடெட் ரூ.5,750 கோடி, ஆர்இஐ அக்ரோ லிமிடெட் ரூ.5,148 கோடி, ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் ரூ.4,774 கோடி, கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ரூ.3,911 கோடி, ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் ரூ 2,894 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி லிமிடெட் ரூ 2,846 கோடி, ப்ரோஸ்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் ரூ 2,518 கோடி, ஸ்ரீ லக்ஷ்மி காட்சின் லிமிடெட் ரூ 2,180 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ 2,66 கோடி திருப்பிச்செலுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கடனை திருப்பி செலுத்தாத முதல் 50 பேர் வங்கிகளுக்கு ரூ.87,295 கோடி பாக்கி: 5 ஆண்டுகளில் ரூ.10.57 லட்சம் கோடி கடன் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: