அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி கோரி மனு

 

கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் நாள் கூட்டத்தில் கரூர் மாவட்டம், ரெங்கநாதன்பேட்டை சட்டப்பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் வழங்கிய மனுவில், ‘கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இருபாலரும் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சிறப்பாக பயின்று கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். தற்போது இப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவைப்படுகிறது. எனவே, வகுப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளியின் நுழைவு வாயில் பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. எனவே, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

The post அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: