ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா குழந்தையுடன் தீ குண்டத்தில் இறங்கியவர் தவறி விழுந்து காயம்

ஊத்துக்கோட்டை: ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பகாசூரன் வதம், திருக்கல்யாணம், நச்சுக்குழி யாகம், அரக்கு மாங்கோட்டை, அர்ஜுனன் தபசு, தர்மராஜா வீதியுலா, மாடுபிடி சண்டை, துரியோதனன் படுகளம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடைபெற்றது.

நேற்று மாலை, விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து, பிரமாண்ட தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்நிலையில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழாவின் போது பக்தர் ரஜேஷ் (45) என்பவர் தனது பேத்தி தாரணி என்ற குழந்தையை தூக்கிக்கொண்டு கால் இடறி தீ குண்டத்தில் கால் இடறி விழுந்துள்ளார். இதில் இருவரும் தீ காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவர்களை தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவகனைக்க் கொண்டு சென்றனர். இதில் மேல் சிகிச்சைக்காக தாரணியை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, தீ மிதி விழாவின் கடைசி நாளான நேற்று அரவான் இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்னர் கொடி இறக்கப்பட்டு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.

The post ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா குழந்தையுடன் தீ குண்டத்தில் இறங்கியவர் தவறி விழுந்து காயம் appeared first on Dinakaran.

Related Stories: