இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்

 

வல்லம், ஜூலை 31: மணிப்பூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறலை கண்டித்து தஞ்சை அருகே வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.வல்லம் நகர தலைவர் முகமது சித்திக் தலைமை வகித்தார். நகர செயலாளர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். வல்லம் நகர திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மரு.சுந்தர்ராஜூ, அவைத்தலைவர் மாணிக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் பஷீர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை குழு மாவட்ட தலைவர் செந்தில்குமார், தஞ்சை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகி குலோத்துங்கன், மனித நேய ஜனநாயக மாநில துணை செயலாளர் அகமது கபீர், வல்லம் நகர திக செயலாளர் அழகிரி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர தலைவர் அப்துல் நசீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் குருசாமி, ஒன்றிய செயலாளர் அபியன்யூ மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்துல் காதர் நன்றி கூறினார்.

The post இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: