ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசு பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் பாராட்டு போளூரில் ஆங்கில மன்றம் தொடக்க விழா

போளூர், ஜூலை 29: போளூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாணவிகள் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்கள். போளூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. தலைமையாசிரியை செ.சுதா தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர்கள் ராமானுஜம், ரவிச்சந்திரன், கஸ்துரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆங்கில மொழியை எளிதாக கற்று கொள்வது எப்படி, ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எப்படி என்பது குறித்தும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை ஆங்கில மொழியில் திறன்மிக்கவர்களாக உருவாக்கும் ஆங்கில மன்றத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி ஆசிரியர்கள் பேசினர். அதனை தொடர்ந்து மாணவிகளின் ஆங்கில திறமையை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரை ேபாட்டி, மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாணவிகள் ஆங்கிலத்தில் பேசி ஆசிரியர்களையே அசர வைத்தனர். அவர்களுக்கு தலைமையாசிரியை செ.சுதா பரிசு வழங்கி பாராட்டினார். இதில் ஆங்கில ஆசிரியர்கள் மரியசீட்டா, விமலா, லதா, செல்வி, உமா, குமுதா, சங்கீதா, ஆனிவினோலியா உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசு பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் பாராட்டு போளூரில் ஆங்கில மன்றம் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: