அய்யாளம்மன் படித்துறை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி 5வது மண்டல கூட்டத்தில் ஆலோசனை

 

தில்லைநகர், ஜூலை 28: வருகிற ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு அய்யாளம்மன் படித்துறைக்கு உறையூர் வழியாக செல்லக்கூடிய சாலையை சீரமைத்து, மின்விளக்குகளை எரியவைத்து பராமரிப்பது என்று திருச்சி மாநகராட்சி 5வது மண்டல கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி 5வது மண்டல கூட்டம் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில், உதவி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கோணக்கரை எரிவாயு இடுகாடு பராமரிப்பு பணிகளை உடனடியாக முடித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு அய்யாளம்மன் படித்துறைக்கு உறையூர் வழியாக செல்ல கூடிய சாலைகளை சீர்படுத்தியும், மின்விளக்குகளை எரிய வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாமன்ற சாதாரண கூட்டம் ஜூன் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தார்சாலை சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

The post அய்யாளம்மன் படித்துறை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி 5வது மண்டல கூட்டத்தில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: