வேலூர் மாவட்டம் அல்லேரி மலையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

வேலூர்: சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் இருவர் உயிரிழந்த நிலையில் வேலூர் மாவட்டம் அல்லேரி மலையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டிற்கு அடுத்துள்ள அல்லேரி மலைப்பகுதியில் சுமார் 14க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் கடந்த 2 மாதங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றரை வயது குழந்தையும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஷங்கர் என்ற வாலிபரும் பாம்பு கடித்து மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் சாலையமைக்கும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக அல்லேரி மலைப்பகுதிக்கு செல்லக்கூடிய சாலையானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் எடுக்கப்படும் இடத்திற்கு இரண்டு மடங்காக வனத்துறையினருக்கு, வருவாய்த்துறையினர் இடம் கொடுக்க வேண்டும்.

கொடுக்கப்பட வேண்டிய இடத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சத்துவாச்சாரி மலையில் அளவிடும் பணி, கடந்த 2 நாட்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வனத்துறைக்கு விரைவில் வருவாய்த்துறையின் நிலத்தை ஒப்படைக்கப்பட்ட பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அல்லேரி கிராம பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

The post வேலூர் மாவட்டம் அல்லேரி மலையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: