போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

தேனி, ஜூலை 27: தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனி வைகை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் ராஜேஸ் கண்ணா முன்னிலை வகித்தார். தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி , சங்க மூத்த உறுப்பினர் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டனர்.

இதில், பேராசிரியர் புதுக்கோட்டை சரவணன் போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனை தடுக்கும் முறைகள் பற்றியும் ,சாலை போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பேசினார். முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியினை இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தொடங்கி வைத்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் , அரிமா துணை ஆளுநர் செல்வகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார் சதீஷ்குமார், ரோட்டரி சங்கத்தின் செயலாளர் சுதா கிருஷ்ணன் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் சுதாகர் நன்றி கூறினார்.

The post போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: