என்.ஐ.கல்லூரியில் கார்கில் வெற்றி தினம்

நாகர்கோவில், ஜூலை 27: கார்கிலில் 1999 ஆம் ஆண்டில் நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. அதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் நாட்டின் பல நிகழ்வுகள் மற்றும் அணிவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பாகமாக நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையத்தில் கார்கில் நாள் அனுசரிக்கப்பட்டது. பல்கலைக்கழக இணை வேந்தர் பெருமாள் சாமி தலைமையில் நூருல் இஸ்லாம் பல்கலைகழக பாதுகாப்பு அகாடமி இயக்குனர் கர்னல்.ஜெயக்குமார் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த கார்கில் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் A K குமரகுரு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இணை துணை வேந்தர்கள் ஜனார்த்தனன், ஷாஜின் நற்குணம், பதிவாளர் திருமால்வளவன் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேசிய மாணவர் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையும் கொடிவணக்கம் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய கர்னல் ஜெயக்குமார் கார்கில் போர் அங்கு நிலவும் நிலைமை அதை கையாண்ட இந்திய ராணுவ வீரர்கள் வீரச் செயல்களை விளக்கி பேசினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

The post என்.ஐ.கல்லூரியில் கார்கில் வெற்றி தினம் appeared first on Dinakaran.

Related Stories: