கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகளிர் உரிமைத் திட்ட முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முகாமில் மகளிர் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பபடிவங்கள் பெற்று பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்பட்டது. ஜனகராஜகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் ராமசாமி தொடங்கிவைத்தார். கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், ஊராட்சி செயலாளர் கோபி ஆகியோர் பங்கேற்றனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: