ஈரோடு: அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனை வசதி செய்யப்படும் என ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த 2 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இது தொடர்பாக 18 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒரு வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கு தொழில்நுட்ப கருவிகள் வாங்க வேண்டும் என்பதால், கால அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post அனைத்து டாஸ்மாக்கிலும் ஆன்லைன் பரிவர்த்தனை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.