போடி ஜிஹெச்சில் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்: கலெக்டர் சான்று வழங்கினார்

போடி, ஜூலை 23: போடி அரசு மருத்துவமனையில் ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட சுகாதாரப் பணிகளின் சார்பில் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்து துவக்கி வைத்தார். கோம்பை வட்டார சுகாதாரப் புள்ளியியலர் இளவரசி வரவேற்றார். குடும்ப நல பணிகள் இணை இயக்குநர் ரமேஷ் பாபு, துணை சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்யா ராஜா, போடி ஜிஹெச் மருத்துவ அதிகாரி ரவீந்திரநாத், டாக்டர்கள் ராஜ பிரகாஷ், ரூபின்ராஜ், டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தண்டபாணி பலரும் பங்கேற்றனர்.

குடும்ப நல துணை இயக்குனர் அன்புச்செழியன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சூரியகுமார் ஆகியோர் குடும்ப அறுவை சிகிச்சைக்கு முன், பின் எப்படி இருக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.ஆண்களுக்கான நவீன வாசக்டமி செய்து கொண்ட முதல் மூன்று ஆண் பயனாளிகளுக்கு தங்க நாணயம், குடும்ப நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு வெள்ளி நாணயம், 5 பயனாளிகளுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100யை கலெக்டர் வழங்கினார்.

The post போடி ஜிஹெச்சில் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்: கலெக்டர் சான்று வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: