கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா

 

காளையார்கோவில், ஜூலை 22: காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்புரை ஆற்றினார்.

ஜப்பான் நாட்டில் உள்ள ஆர்க் வேர் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பிரபு, மேலாளர் அனுசியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வடிவியல் பெட்டி, நோட்டுகள், வாய்ப்பாடுகள், சிலேட்டுகள் என ரூபாய் 20000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை கமலாபாய் நன்றி கூறினார்.

The post கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: