சுப்ரீம் கோர்ட் முதல் கீழமை நீதிமன்றம் வரை நாடு முழுவதும் 5.02 கோடி வழக்குகள் நிலுவை: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 5.02 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘உச்ச நீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 5.02 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 69,766 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 14ம் தேதி நிலவரப்படி உயர் நீதிமன்றங்களில் 60,62,953 வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4,41,35,357 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு காரணம், போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பற்றாக்குறை மற்றுமின்றி பிற காரணிகளும் உள்ளன. பல்வேறு வகையான வழக்குகளை தீர்ப்பதற்கு, அந்தந்த நீதிமன்றங்களால் குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்யும் முறையில்லை வழக்குகள் அடிக்கடி ஒத்திவைக்கப்படுகிறது. விசாரணையை கண்காணிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும் போதுமான ஏற்பாடுகள் இல்லாததால் வழக்குகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவைகள் இருப்பதற்கு ஒன்றிய அரசுக்கு நேரடி பங்கு இல்லை’ என்றார்.

The post சுப்ரீம் கோர்ட் முதல் கீழமை நீதிமன்றம் வரை நாடு முழுவதும் 5.02 கோடி வழக்குகள் நிலுவை: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: