ஆக.9ல் மக்கள் தொடர்பு முகாம் பொதுமக்கள் இன்று மனுக்கள் அளிக்கலாம்

 

புதுக்கோட்டை,ஜூலை 21: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளுர் சரகம், அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் வரும் 9.8.2023 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு இன்று (21ம்தேதி) காலை 10.30 மணியளவில் விராலிமலை தாலுகா, அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள கிராம சேவை மையக் கட்டிடத்தில் முன் மனுக்கள் பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post ஆக.9ல் மக்கள் தொடர்பு முகாம் பொதுமக்கள் இன்று மனுக்கள் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: