கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வலியுறுத்த வேண்டும்: ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் மனு

சென்னை: காவிரி நதி நீர் தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து மனு அளித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கர்நாடக அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரினை தமிழ்நாட்டிற்கு அளித்திட, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி, நேற்று முன்தினம் அன்று எழுதிய கடிதத்தை, அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து அளித்தார்.

பின்னர் ஒன்றிய அமைச்சரிடம் துரைமுருகன் கூறியதாவது: கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இத்தகைய கடினமான சூழலில், குறுவை பயிரினை காக்க, கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரை திறந்திட உத்தரவிட வேண்டும். இப்பிரச்னையில் தலையிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாத வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்குமாறும், நீர்குறைபாட்டை ஈடு செய்யுமாறும், கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட தேவையான அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் ஒன்றிய அமைச்சர் வழங்க வேண்டும். அதற்கு, ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

The post கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வலியுறுத்த வேண்டும்: ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் மனு appeared first on Dinakaran.

Related Stories: