எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மையங்களை மூட கூடாது: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 186 மையங்களை மூடவேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூடினால் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வுதடைப்படும். அத்துடன், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளை ஏற்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 2500 தொழிலாளர்களின் வேலை பறிபோகும் சூழலும் ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத்துறையின், மருத்துவ சேவைகளை, நோக்கங்களை சிதைக்கிற ஒன்றிய அரசின் தவறான போக்குகளுக்கு இடமளிக்க கூடாது.

The post எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மையங்களை மூட கூடாது: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: