டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பைக்கு தீ வைப்பு

 

ஆட்டையாம்பட்டி, ஜூலை 19: ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், பல ஆண்டாக பஸ் நிலையம் பின்புறம் உள்ள கரட்டில் கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் டன் கணக்கில் சேர்ந்த குப்பையால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி சமூக விரோதிகள் சிலர் அடிக்கடி குப்பைக்கு தீ வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இங்குள்ள குப்பையை பிளாஸ்டிக், கல், மணல் என தனித்தனியாக பிரித்தெடுத்து அகற்றும் பொருட்டு சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் பிளான்ட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் இப்பகுதி ட்ரான்ஸ்பார்மர் அருகில் உள்ள குப்பை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கவனித்த கடைக்காரர்கள் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். டிரான்ஸ்பார்மர் அருகில் தீ எரிந்த நிலையில் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அடிக்கடி குப்பைகள் மீது தீவைக்கும் நபர்கள் பற்றி பேரூராட்சி ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர். இப்பாதையில் டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்கள் சிகரெட் பிடித்து விட்டு தூக்கி எறிந்து சென்று இருக்கலாம் என கருதப்படுகின்றது.

The post டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பைக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: