விம்பிள்டன் இறுதிப்போட்டியில் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த ஜோகோவிச்சிற்கு அபராதம்

லண்டன்: கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரான விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தனது ராக்கெட்டை(பேட்) அடித்து நொறுக்கிதாள் நோவக் ஜோகோவிச்சிற்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அனுபவ வீரர் ஜோகோவிச் மோதினர். இருவருக்கும் இடையே போட்டி மிக கடுமையாக இருந்தது.

முதல் செட்டில் ஜோகோவிச் 6-1 என எளிதாக வெற்றி பெற தீவிரமாக விளையாடி 2ம் செட்டை கார்லோஸ் அல்காரஸ் தன் வசம் ஆக்கினார். தொடர்ந்து 3வது செட்டில் கார்லோஸ் அல்காரஸ் எளிதில் வெற்றி பெற்றார். 4வது செட்டில் 6-3 என்ற புள்ளி கணக்கில் ஜோகோவிச் வென்றார்.

இதனால் போட்டியில் அனல் பறந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 5வது செட்டில் கார்லோஸ் அல்காரஸ் 6- 4 என்ற கணக்கில் வென்று விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த ஜோகோவிச் தனது டென்னிஸ் ராக்கெட்டை நெட் போஸ்ட்டில் அடித்து நொறுக்கியதற்காக ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ராக்கெட்டை அடித்து நொறுக்கியதற்கு வருத்தம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது தான் விரக்தியில் இருந்ததாக ஜோகோவிச் தெரிவித்தார்.

The post விம்பிள்டன் இறுதிப்போட்டியில் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த ஜோகோவிச்சிற்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: