மாநிலங்களவை எம்பி பதவி அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: மாநிலங்களவை எம்பி பதவிக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர், நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். அந்த 11 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 24ம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இவர்களில் டெரிக் ஓ பிரையன் (மேற்கு வங்காளம்) மற்றும் ஒன்றிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (குஜராத்) உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.. ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாளாகும்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மனுத்தாக்கல் செய்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பாஜவை சேர்ந்த 5 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் இருந்து பா.ஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்,கேஸ்ரிதேவ்சிங் திக்விஜய்சிங் ஜாலா, தேசாய் பாபுபாய் ஜெசங்பாய் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரையன், சுகந்து சேகர் ராய், சாகேத் கோகலே, டோலா சென், சமிஸ்ருல் இஸ்லாம், பிரகாஷ் சிக் பராயக், பா.ஜ சார்பில் அனந்த ராய் மகாராஜ் ஆகியோரும், கோவாவில் இருந்து 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

The post மாநிலங்களவை எம்பி பதவி அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: