இதன் பின்னர் சுமேஷ் தன்னுடைய நண்பர்களான சக்தி (18), அனூப் (22), அபிஜித் (20) மற்றும் அரவிந்த் (28) ஆகியோருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். அவர்களும் அந்த மாணவியை மிரட்டி கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மாணவி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளுக்கு கவுன்சலிங் நடத்தினர்.
அப்போது அந்த மாணவி, தன்னை காதலன் சுமேஷ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த விவரத்தை கூறி கதறி அழுதார். இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் அடூர் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காதலன் சுமேஷ் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: காதலன் உள்பட 5 கொடூரன்கள் கைது appeared first on Dinakaran.
