விவசாயிகள் சொல்வதை கேளுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: விவசாயிகளின் கருத்தை புரிந்து கொண்டு செயல்பட்டால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியம் என ராகுல் காந்தி மறைமுகமாக மோடிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அரியானா, சோனிபட்டில் விவசாயிகளை சமீபத்தில் சந்தித்தார். அது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியாவின் பலமே விவசாயிகள் தான். அவர்களுக்கு எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் தெரியும், அதே நேரத்தில் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கவும் தெரியும்.

அவர்களது உரிமைகளுக்காக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதார விலை உரிமைக்காவும் உறுதியாக போராடினர். அவர்கள் கூறுவதை, புரிந்து கொண்டால் நாட்டின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார். அரியானாவில் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் டெல்லியில் உள்ள பிரியங்காவின் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு, சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் அவர்கள் உணவு சாப்பிட்டனர்.

The post விவசாயிகள் சொல்வதை கேளுங்கள்: மோடிக்கு ராகுல் காந்தி அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: