வாகன ஓட்டிகள் கோரிக்கை சுவாமிமலை கோயில் தெப்பத்திருவிழாவிற்காக காவிரி ஆற்றிலிருந்து குளத்திற்கு நீர் கொண்டு வர ஏற்பாடு

 

கும்பகோணம், ஜூலை 15: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவிற்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த விழாவிற்காக சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நேத்திர புஷ்கரணி குளத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் வகையில் புதிய குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக பொக்லைன் மூலம் பள்ளம் ேதாண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக பம்புசெட் மோட்டார் மூலம் நீர் இறைத்து தெப்பத்திருவிழா நடத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது காவிரியில் இருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெப்பத்திருவிழா நடத்தும் பணிகள் கோயில் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

 

The post வாகன ஓட்டிகள் கோரிக்கை சுவாமிமலை கோயில் தெப்பத்திருவிழாவிற்காக காவிரி ஆற்றிலிருந்து குளத்திற்கு நீர் கொண்டு வர ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: