விருதுநகர், ஜூலை 14: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகர் கொல்லர் தெருவில் இயங்கி வரும் குடிசை தொழில் கூட்டுறவு சங்கத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் தங்கலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத் திட்டங்கள் பற்றி விளக்கினார்.
பெண்கள் பாதுகாப்பு அலுவலர் இந்திரா ஜெயசீலி, இத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் தொழில் கூட்டுறவு அலுவலர் தயாளன், பெண்கள் சங்க செயலாளர், கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்கள் உட்பட சுமார் 80 பெண்கள் பங்கேற்றனர். கணக்கர் சகிலா பானு நன்றி தெரிவித்தார்.
The post பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
