தென்திருப்பேரையில் ரூ.8.41 கோடியில் மேல்நிலை நீர்த்தேக்க அடிக்கல் நாட்டுவிழா எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு விளங்குகிறது

வைகுண்டம், ஜூலை 14: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு விளங்குகிறது என்று தென்திருப்பேரையில் நடந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழாவில் கனிமொழி எம்பி பேசினார். தென்திருப்பேரை பேரூராட்சி மேல ரத வீதியில் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின் கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி பேசுகையில், அம்ரூத் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 5 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. 24 மணி நேரமும் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டம்தான் இத்திட்டம். இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தென்திருப்பேரையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படுவது பெருமை தரக்கூடியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, எப்பொழுதும் மக்களை விட்டு விலகவும் மாட்டோம், அகலவும் மாட்டோம் என்ற உறுதியோடு மக்களுடைய எதிர்பார்ப்புகளை, கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கூடிய அரசாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறார். மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை செப்.15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிற ஆட்சியாகும், என்றார்.

விழாவில் தென்திருப்பேரை தொழிலதிபர் கண்ணன் பண்ணையார், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்தவள்ளி, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி, செயல் அலுவலர் ரமேஷ்பாபு, ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், பிடிஓக்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், மாவட்ட பஞ். உறுப்பினர் செல்வக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், நகர செயலாளர் முத்து வீரபெருமாள், மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மகரபூஷணம், ஒன்றிய செயலாளர்கள் நவீன்குமார், ஜோசப், பாலமுருகன், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

The post தென்திருப்பேரையில் ரூ.8.41 கோடியில் மேல்நிலை நீர்த்தேக்க அடிக்கல் நாட்டுவிழா எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு விளங்குகிறது appeared first on Dinakaran.

Related Stories: