க.பரமத்தி அருகே பைக் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் பலி

 

க.பரமத்தி,ஜூலை13: க.பரமத்தி அருகே பூலாங்காளிவலசு பகுதியில் பைக் சாலை யோரத்தில் நிலை தடுமாறி விழுந்த விபத்தில் சிகிச்சை பெற்றவர் பலனின்றி இறந்தார். திருப்பூர் மாவட்டம் முத்தூர் அடுத்த ஊடையம் ஜீவாநகரை சேர்ந்தவர் ஆண்டவன் மகன் வரதராஜ் (38). இவர் கடந்த நாட்களில் கோவில் திருவிழாவிற்காக ஊரில் இருந்து பைக்கில் புறப்பட்டு நடந்தை கன்னிமார் கோயில் திருவிழாவிற்கு வந்துள்ளார். பிறகு மீண்டும் ஊருக்கு சென்றுள்ளார்.

பூலாங்காளிவலசு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக பைக் சாலையோரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது பாதிக்கப்பட்டவரை தனியார் அம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து பாதிக்கப்பட்டவரின் உறவினர் சந்திரன் அளித்த புகாரின் பேரில் இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post க.பரமத்தி அருகே பைக் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: