பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர் மாடுகள் வரத்து அதிகம்-கூடுதல் விலையால் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாடுகளை, கேரள வியாபாரிகளே அதிகம் வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதன்பின் கடந்த வாரத்தில், கர்நாடகா மாநிலத்திலிருந்து மாடுகள் வரத்து குறைந்து, தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இருந்தே மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

நேற்று நடந்த சந்தையின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு வரத்து ஓரளவு இருந்தாலும், கேரள மாநில பகுதியிலிருந்து வியாபாரிகள் மிகவும் குறைவால், மாடு விற்பனை மந்தமானது. உள்ளூர் வியாபாரிகளே அதிக விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதில் காளை மாடு முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என, கடந்த வாரத்தைவிட சராசரியாக ரூ.3 ஆயிரத்து என அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர் மாடுகள் வரத்து அதிகம்-கூடுதல் விலையால் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: