கனடா ஓபன் பேட்மிண்டன் சீன வீரரை வீழ்த்தி லக்‌ஷயா சென் சாம்பியன்

கேல்கேரி: கனடா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கேல்கேரி நகரில் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நேற்றிரவு நடந்தது. உலக தரவரிசையில் 19வது இடம் வகிக்கும் 21 வயது இந்திய வீரர் லக்‌ஷயா சென், 10ம் நிலை வீரரான சீனாவின் 23 வயது லி ஷி பெங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்‌ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் லி ஷி பெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2வது செட்டில் 16-20 என பின் தங்கியிருந்தபோதும் தொடர்ச்சியாக 6 புள்ளிகளை எடுத்து அசத்தினார். இந்த ஆண்டில் அவர் பெறும் முதல் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்தியா ஓபன் வெற்றிக்குப் பிறகு சென்னின் 2வது பிடபிள்யூஎப் (பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு) சூப்பர் 500 பட்டம் இதுவாகும். இந்த வெற்றி மூலம் சென் தரவரிசையில் 12வது இடத்திற்கு முன்னேறி உளளார்.

 

The post கனடா ஓபன் பேட்மிண்டன் சீன வீரரை வீழ்த்தி லக்‌ஷயா சென் சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: