திருப்புத்தூர் அருகே சூசையப்பர் ஆலயத்தில் சப்பர திருவிழா

திருப்புத்தூர், ஜூலை 10: திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் அமைந்துள்ள சூசையப்பர் தேவாலயத்தில் திருமுழுக்கு யோவானின் திருபெருவிழா என்னும் சப்பரத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவானது கிறிஸ்தவ பெருமக்களால் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் தேவாலயத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி பங்குத்தந்தை ஜெயசீலன் உள்ளிட்ட மூன்று பங்கு தந்தையர்கள் கிறிஸ்தவ பெருமக்கள் மத்தியில் சொற்பொழிவு ஆற்றினார்.

தொடர்ந்து ஜபதிருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண வண்ண விளக்குகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட டிராக்டர் வண்டியில் இயேசு கிறிஸ்து, மேரி குழந்தை,
மேரி உள்ளிட்ட சிலைகள ஏற்றி கொண்டு வானவேடிக்கைகளுடன் நகரின் முக்கிய விதிகளில் வலம் வந்தது. மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவாலய விழா குழு நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் செய்திருந்தனர்.

The post திருப்புத்தூர் அருகே சூசையப்பர் ஆலயத்தில் சப்பர திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: