வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர் முத்துசாமி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்குவார். முன்னதாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.
