The post தண்டலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.
பெரும்புதூர்: பெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் பெரும்புதூர் வருவாய் கோட்டம் அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மலர்விழி முன்னிலை வகித்தார். முகாமில், பெரும்புதுார் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுகள் அளித்தனர். இதைதொடர்ந்து 5 மாற்றுதிறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கபட்டது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
The post தண்டலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.