குருப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.19.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

 

பவானி, ஜூலை4: பவானி ஊராட்சி ஒன்றியம், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரூ.19.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, நடராஜபுரத்தில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். பவானி ஒன்றிய கவுன்சிலர்கள் சரோஜா திருமூர்த்தி,சவிதா சுரேஷ்குமார்,பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன்,ஊராட்சித் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றினர்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம்,துணைச் செயலாளர் அறிவானந்தம்,ஒன்றியச் செயலாளர் பவானி கே.ஏ.சேகர், துணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார்,அப்பிச்சி,சிவரஞ்சனி குமரேசன், பவானி நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன்,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆர்.தங்கவேலு, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.ஏ.அன்பழகன், மாவட்டப் பிரதிநிதிகள் சண்முகம், ஒரிச்சேரி தங்கமணி,ஒன்றிய அவைத் தலைவர் தட்சிணாமூர்த்தி,ஜம்பை பேரூராட்சித் தலைவர் என்.ஆனந்தகுமார்,தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி கண்ணன்,அரசு வழக்கறிஞர் விஜயகுமார், ஊராட்சிச் செயலாளர் சண்முகம்,கிளைச் செயலாளர்கள் தண்டபாணி, அசோக்குமார்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விவேகானந்தன், நிர்வாகிகள் விஸ்வநாதன், உதயகுமார், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post குருப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.19.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: