ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.03 மீ.) வெள்ளிப் பதக்கமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெச் (86.13 மீ.) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். நடப்பு சீசனில் நீரஜ் 2வது முறையாக டைமண்ட் லீக் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தோஹாவில் மே 5ம் தேதி நடந்த போட்டியில் அவர் 88.67 மீ. தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தார்.
The post டைமண்ட் லீக் தடகளம் தங்கம் வென்றார் நீரஜ் appeared first on Dinakaran.