பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பில் ஊட்டியில் நாடக தமிழ் ஆய்வரங்கம்

 

ஊட்டி, ஜூலை 1: பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பில் ஊட்டி ஒய்எம்சிஏ படிப்பகத்தில் நாடகத்தமிழ் ஆய்வரங்கம் நடைபெற்றது. புலவர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆய்வரங்கை பெரியார் வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்து, நீலகிரி மாவட்டத்தில் மறைந்து போன நாடகக் கலை புத்துயிர் பெற ஆலோசனைகள் கூறினார்.  மலைச்சாரல் மன்ற மூத்த கவிஞர் சோலூர் கணேசன் பேசுகையில், ஓரங்க நாடகங்கள் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வூட்டும் கருத்துகளை பரப்பிட அரசு உதவிட வேண்டும். இதன்மூலம், நாடகக் கலைஞர்களின் வாழ்வு புத்துயிர் பெறும் என்றார்.

பாவேந்தர் இலக்கியப் பேரவை தலைவர் ஜனார்தனன் பேசுகையில், பள்ளிக் கல்லூரிகளில் பாடத் திட்டத்தில் நாடகக் கலை ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும் என்றார்.
பம்மல் கே சம்மந்த முதலியார், எம்ஆர். ராதா, பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாடகக் காவலர் மானேகர் ஆகியோர் குறித்து இந்நிகழ்வில் நினைவு கூறப்பட்டது. நடிப்பிசை புலவர் ராமசாமி, கலைவாணர் கிருஷ்ணன் ஆகியோர் நாடகத் துறைக்கு ஆற்றிய பங்கு குறித்து நீலமலை ஜேபி எடுத்துரைத்தார். லேம்பாடு வாழ்த்துரை வழங்கினார். முடிவில் ஒய்எம்சிஏ., நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.

The post பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பில் ஊட்டியில் நாடக தமிழ் ஆய்வரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: