லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை ரூ.1500 கோடிக்கு சொத்து சேர்த்த கர்நாடக தாசில்தார் கைது: 100 ஏக்கர் சொத்து, 9 சொகுசு கார்கள் கத்தை கத்தையாக பணம் சிக்கியது

பெங்களூரு: ரூ.1500 கோடிக்கும் அதிகமான சொத்து சேர்ந்த தாசில்தார் கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் சிக்கினார். அவரிடம் இருந்து சொகுசு கார்கள், அஜித்குமார் ராயிடம் லோக்ஆயுக்தா போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கேஆர்புரத்தில் தாசில்தாராக பணியாற்றி அஜித் குமார் ராய் வீடுகள், அவரின் உறவினர் வீடுகளில் நடத்திய சோதனையில் தோண்ட தோண்ட ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சிக்கியது.

குறிப்பாக அஜித்குமார் ராய், தாசில்தார் பணியில் சேர்ந்த குறுகிய நாட்களில் அவரின் சம்பளத்தை விட 500 மடங்கு அதிக சொத்து சேர்த்துள்ளார். அஜித்குமார் ராய் வீடுகளில் மட்டும் இன்றி பினாமியாக செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 40 மணி நேரம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1500 கோடிக்கும் அதிகமான சொத்துகள், ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன. இதையடுத்து அவரை லோக்ஆயுக்தா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.2.5 கோடி மதிப்புள்ள லேண்ட் க்ரூசர் மற்றும் 4 பார்ச்சூனர் கார்கள், 4 ஜீப்கள், பல லட்சம் மதிப்பிலான ராயல் புல்லட் மோட்டார் சைக்கிள்களும் அவரிடம் சிக்கின. கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் கத்தை கத்தையாக ரூ.40 லட்சம் ரொக்கம் சிக்கியது. அத்துடன் 700 கிராம் தங்க நகைகள், ரூ.1.90 கோடி மதிப்பிலான வைர நகைகள், லாண்ட் குருசர் கார், 1.45 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மதுவகைகள், 100 ஏக்கருக்கும் அதிக நிலத்தின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாதாரண தாசில்தார் பணியில் இருக்கிற அஜித்குமார் ராய் தனியார் பாதுகாவலர்களுடன் வலம் வந்துள்ளார். 100 ஏக்கருக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் ராயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை ரூ.1500 கோடிக்கு சொத்து சேர்த்த கர்நாடக தாசில்தார் கைது: 100 ஏக்கர் சொத்து, 9 சொகுசு கார்கள் கத்தை கத்தையாக பணம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: