பாஜ தொண்டரை தாக்கியதாக அசாம் எம்எல்ஏ திடீர் கைது

ஹைலகண்டி: அசாம் மாநிலம், அல்காபூர் தொகுதி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி( ஏஐயுடிஎப்) எம்எல்ஏ நிஜாமுதீன் சவுத்ரி. நேற்றுமுன்தினம் நிஜாமுதீனும் அவரது கட்சி தொண்டர்கள் சிலரும் தன்னை தாக்கியதாக, ஹைலகண்டி மாவட்ட பாஜ கட்சியின் சிறுபான்மை பிரிவு உறுப்பினரான அதாவூர் ரகுமான் லஸ்கர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும், தங்க செயின், ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்ததோடு, காரையும் அடித்து சேதப்படுத்தி விட்டதாக புகாரில் தெரிவித்தார். இந்த புகாரை தொடர்ந்து நிஜாமுதின் கைது செய்யப்பட்டதாக எஸ்பி லீனா டோலே நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிஜாமுதீன் அரசியல் காரணங்களுக்காக தன் மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

The post பாஜ தொண்டரை தாக்கியதாக அசாம் எம்எல்ஏ திடீர் கைது appeared first on Dinakaran.

Related Stories: