பெங்களூருவில் ஜூலை 13, 14ல் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம்: சரத்பவார் அறிவிப்பு

புனே: எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார். அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ.வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வியூகம் அமைத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் மதசார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், பாரதீய ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளை தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தன.

இந்நிலையில், புனேவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ‘’எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும்,’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘’பொது சிவில் சட்டத்தை பற்றி பேசும் ஒன்றிய அரசு முதலில் சட்டப்பேரவைகளிலும் மக்களவையிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் வழங்கட்டும். பின்னர் பொது சிவில் சட்டத்தை பற்றி பேசலாம். எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி ஒருவித பதற்றத்துடன் காணப்படுகிறார்,’’ என்று கூறினார்.

The post பெங்களூருவில் ஜூலை 13, 14ல் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம்: சரத்பவார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: