நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: பிரதமர் மோடி ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்; “ஈத் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். மேலும், இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்; அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள்; இந்த நன்னாள் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: பிரதமர் மோடி ராகுல் காந்தி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: