விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கர்நாடக கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: விதிமுறைகளை மீறி செயல்பட்ட புகாரின் அடிப்டையில் கர்நாடகாவை சேர்ந்த கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மகாலட்சுமி கூட்டுறவு வங்கி என்ற வங்கியின் வங்கி உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரத்து செய்துள்ளது. இனிமேல் இந்த வங்கி வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும். இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மகாலட்சுமி கூட்டுறவு வங்கியின் வங்கியின் செயல்பாடுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இனிமேல் அந்த வங்கியானது, வங்கி அல்லாத நிறுவனமாக தொடர்ந்து செயல்படும். இந்த வங்கிக்கு கடந்த 1994ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வங்கிக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது.

கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறையை மீறியதற்கான ஆவணங்களின் அடிப்படையில், மேற்கண்ட வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரலில் அடூர் கூட்டுறவு நகரத்தின் வங்கி உரிமத்தை ரத்து செய்தது. தற்போதைய அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கிகளுக்கான விதிமுறைகளை மீறிய புகாரின் அடிப்படையில், உஜ்ஜைனி நாக்ரிக் சககாரி வங்கி மரியடிட், பனிஹாட்டி கூட்டுறவு வங்கி, பெர்ஹாம்பூர் கூட்டுறவு அர்பன் வங்கி, சோலாப்பூர் சித்தேஷ்வர் சஹாகாரி வங்கி, உத்தரபிரதேச கூட்டுறவு வங்கி லிமிடெட், உத்தர்பரா கூட்டுறவு வங்கி ஆகிய 7 வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கர்நாடக கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: